Tuesday, March 22, 2005
Sunday, March 13, 2005
கேள்வி பதில்
1995 பெப்ரவரி அஞ்சல் விநியோகம் தாமதங்கள் எதுவுமின்றி திறமையாக நடைபெறும் பொருட்டு பொறுப்பாய் உள்ள அஞ்சலதிபர் என்ற முறையில் ஒருவர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
தபால்களை நேரகாலத்துடன் ஒப்படைப்பு செய்ய வேண்டும் என்பது எமது திணைக்களத்தின் குறிக்கோளாகும். இதற்காக தபால் பையொன்று வந்து கிடைத்ததும் அதனை வெட்டித திறந்து பரிசோதனை செய்து ஒப்படைப்பிற்கு அனுப்பி வைக்க வேண்டியது ஒரு அஞ்சலதிபரின் கடமையாகும். இதனை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அவர் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துதல் வேண்டும். அ. தபால்பெட்டி சேகரிப்பு. ஆ. தபால் கட்டி அனுப்பதல். இ. வந்த தபாலை பரிசோதனை செய்தல ஈ. தபால்பெட்டீ சேகரிப்புக்கான பரிசோதனைக் கடிதங்கள். உ. ஒழுங்கான தபால் விநியோகத்திற்கான பரிசோதனைக் கடிதங்கள். ஊ. தபால் ஒப்படைப்பிற்கு அஞ்சலாளர் தம்மை தயார்நிலைப்படுத்தல். எ. ஒப்படைப்புக்காக அஞ்சலாளர் அனைவரும் நேரகாலத்துடன் ஒரே நேரத்தில் வெளியேறுதல்.
அஞ்சல் அலுவலக விதிகளில் கூறப்பட்டவாறு மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடத்தல் அஞசல் விநியோகத்தில் தாமதங்களை தடுப்பதற்கும் தவறுகளை திருத்துவதற்கும் வாய்ப்பு கிடைக்கும். எனவே பொறுப்பாய் உள்ள அஞ்சல் அதிபர்கள் இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.
. 1996 ஜனவரி முறையீட்டாளரொருவர் தான் பெற்றுக்கொண்ட பதிவு செய்த வெளிநாட்டு கடிதமொன்றிலிருந்த குறுக்கு கோடிடப்பட்ட ஒரு வெளிநாட்டு காசோலை இழக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யுமிடத்து பொறுப்பாய் உள்ள அஞசலதிபர் முறையீட்டாளருக்கு முதலாவதாக என்ன ஆலோசனை வழங்க வேண்டுமெனவும் அவர் தனது நிர்வாக பொறுப்பின் அடிப்படையில் இம்முறைப்பாடு பற்றி எவ்வாறு தொடக்க விசாரணையை மேற்கொள்ள வேண்டுமெனவும் விளக்குக?
இவ் வகையான முறைப்பாடு கிடைத்ததும் முறைப்பாட்டாளரை அணுகி அடுத்த கடிதத்தில் அது வரக்கூடி யதாக இருக்குமென்றும் பல சந்தர்ப்பங்களில் இவ்வகையான முறைப்பாடுகளை விசாரணை செய்த போது கடிதங்களை எழதுபவர்கள் காசோலைகளை குறிப்பட்ட கடிதத்திகுள் வைக்க மறந்த சந்தர்ப்பங்கள்; இருந்கன என்பதையும அவருக்கு கூறவேண்டும். அவ்வாறு முதல் கடிதத்தில் காசோலையை வைத்து அனுப்ப மறந்தவர்கள் உடனடியாக அடுத்த கடிதத்தில் அவற்றை அனுப்பி இருக்கின்றார்கள். குறுக்கு கோடிட்ட காசோலைகளை இலகுவில் காசாக்க முடியாது. ஆதனை ஒருவர் தனது வங்கிக் கணக் கில் வைப்புச் செய்தே காசாக்க முடியும். ஆதலால் தொலைந்து போன காசோலை இழந்த பணமாக கருதப்பட வேண்டியதில்லை என்றும் அதன் அனுப்புனருக்கு தெரிவித்து அக்காசோலையின் கொடுப்பனவை நிறுத்துமாறு அவருக்கு தெரிவி;க்கும்படியும் ஆலோசனை கூறுதல் வேண்டும். அடுத்ததாக முறைப்பாட்டை பெற்ற அஞ்சலதிபர் குறித்த கடிதத்தின் உறையை முறைப்பாட்டாளரிடம் இருந்து பெற்று அக்கடிதம் தமது காரியாலயத்தில் வந்து கிடைத்த தினத்தில் கடமை புரிந்த தபால் இலிகிதர், தபால் பையை வெட்டித் திறந்த கே.கே.எஸ், அதனை ஒப்படைத்த அஞ்சலாளர் ஆகியோரிடம் வாக்கு மூலங்களைப் பெற்று அவற்றின் அடிப்படையில் தமது அவதானிப்புகளையும் குறித்து பெரும்பாக அஞ்சல் அத்தியட்சகருக்கு அதனை அனுப்பி வைத்தல் வேண்டும். விசாரணை முடிவில் பதில்; அனுப்பப்படும் என்பதை முறைப்பாட்டாளருக்கு தெரிவித்தல் வேண்டும். முறைப்பாடு ஒன்று தபால் மூலம் கிடைத்திருப்பின் அம் முறைப்பாடு கிடைத்தமை பற்றி மூன்று நாட்க ளினுள் பதில் அனுப்புவதோடு மேற்கொள்ளப்படும் விசாரணையின் முடிவில் விளக்கமான பதில் அனுப்ப ப்படும் என்றும் அக்கடிதத்தில் குறித்து அனுப்புதல் வேண்டும்.
1996 நவம்பர்
ஓர் அஞ்சலகத்தில் கருமபீட அலுவலர்களின் கடமைகளை மேற்பார்வை செய்தல் தரத்தில் மேம்பட்ட அஞ்சல் சேவை நடைபெற உதவும் விளக்குக?
ஒரு கருமபீட உத்தியோகத்தர் அஞ்சலகத்தின் வாடிக்கையாளருடன் நேரடியான தொடர்புகளை வைத்திருப்பவராகும். முகாமைத்துவத்தில் இவ்வகையினர் முன்னிலை முகாமையாளர் என அழைக்க ப்படுகின்றனர். வாடிக்கையாளர் எனப்படுபவர் மிகவும் மென்மையானவர்கள் அவர்கள் எம்மை நாடி வரும் விருந்தினர்களென காந்தி மகான் கூறுகின்றார். விருந்தினர்கள் அனிச்சம் பூவிற்கு சமமானவர்கள். அதனை ஒரு முறை முகர்ந்தவுடன் வாடிவிடும். அதுபோன்றே வாடிக்கையாளரும் கௌரவிக்கப்படவில்லையானால் தமது தொடர்பை அறுத்துவிடுவர். தம்மை கௌரவிக்கவில்லையானால் 65மூ வாடிக்கையாளர்கள் ஒரு தாபனத்தை விட்டு விலகுகின்றார்கள் என சந்தைப்படுத்தல் கொள்கைகள் மூலம் அறியக்கிடக்கின்றது. அஞ்சல் திணைக்களத்தில் பெரும்பாலும் சேவை உற்பத்தியே நடைபெறுகின்றது. எனவெ நாம் வாடிக்கை யாளரை பெருக்கிக்கொள்வது அவசியமாகின்றது. 1815 இல் ஆறு அஞ்சலகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட எமது அஞ்சல் சேவை அண்மைக்காலம் வரை தொடர்பாடல்துறையில் 100மூ ஆன சந்தைப் பங்கை வைத்துக் கொண்டிருந்தது. தற்பொழுது பல வேறுபட்ட உள்நாட்டு வெளிநாட்டு போட்டியாளர்களின் காரணமாக பெருமளவு சந்தைப் பங்கை இழந்து வருகின்றது. எனவே புதிய வாடிக்கையாளரை தேடிக் கொள்ளும் முயற்சியில் இறங்கி உள்ள நாம் எமது பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வதற்கும் முழு முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இப்பணியின் முக்கியஸ்தர்களாக இருப்பவர்கள் நமது கருமபீட அலுவலர்களே அவர்களுடைய உபசரிப்பு, உதவும் தன்மை, திருத்தமான சேவை, விரைவான நடவடிக்கை, பண்பான உரையாடல், அன்பான வழியனுப்பல், தொடர்பாடல் துறையில் வாடிக்கையாளரை பெருக்குவதற்கும் சேவையின் தரத்தை அதிகரிப்பதற்கும் நிச்சயமாக உதவும். எனவே கருமபீட அலுவலர்களின் கடமைகளை மேற்பார்வை செய்தல் இப் பணியை மேலும் மேம்படுத்தலாம் என்பது எனது கருத்தாகும்.
1996 நவம்பர்
பொறுப்பாய் உள்ள அஞ்சலதிபராக நீ;ர்; இருக்குமிடத்து போட்டீ நிறைந்த ஒரு சந்தையில் எல்லைக்கு உட்பட்ட மனித, நிதி, பௌதீகவளங்களைப் பயன்படுத்தி உமது அலுவலகத்தில் வினைத்திறமை வாய்ந்த அஞ்சல் சேவையொன்றை வழங்குவதற்கு எவ்வாறு நீர்; நடவடிக்கை மேற்கொள்வீர் எனக் கூறுக?
எமது தொழில் தொடர்பாடல்துறையைச் சார்ந்தது அஞ்சலகங்கள் தொடர்காடல் வர்த்தகத்தை நடாத்துகி ன்றன. தொடர்பாடல் துறையில் தற்பொழுது அதிக போட்டிகள் தோன்றி உள்ளன. இப் போட்டியினால் தொடர்பாடல் சந்தையில் பெரும்பகுதியை இழக்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.இதிலிருந்து விடுபட வேண்டுமானால் நாம் எமது எல்லைக்குட்பட்ட மனித, நிதி, பௌதீக வளங்களை பயன்படுத்த வேண்டும். ஒரு அஞ்சலகத்தை எடத்துக் கொண்டால் அது ஒரு பொறுப்பாய் உள்ள அஞ்சல் அதிபரினால் நிர்வகிக் கப்படும். அவரின் கீழ் ஒரு அங்கீகரிக்கப்பட்ட ஆளணி செயற்படும். அந்த அஞ்சலகத்தில் சேவைகளை நிறைவேற்ற கட்டுநிதி (ஐஆPசுநுளுவு)இ சில்லறைப் பணக் கட்டுநிதி(Pநுவுவுலு ஊயுளுர் ஐஆPசுநுளுவு) ஏன்பன வழங்கப்படும். மேலும் காரியாலய சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்ற தளபாடங்கள் வழங்கப்படும். இவற்றை முறையே மனித, நிதி, பொருள் (ஆயுNஇ ஆழுNநுலுஇஆயுவுநுசுஐயுடு) வளங்கள் எனலாம். முகாமைத்துவத்தில் பிரதான வளங்களாக இவற்றையே கூறப்பட்டுள்ளது. இவ்வளங்களைப் பயன்படுத்தி ஒரு செயற்பாட்டை நிறைவேற்றுவதற்கு திட்டமிடல், ஒழங்கமைத்தல், ஊழி யரிடல், கட்டுப்படுத்தல் என்ற முகாமைத்தவ பணிகளை முறையாக மேற்கொள்ளல் வேண்டும். ஒரு பொறுப்பாயுள்ள அஞ்சலதிபர் தம்மிடமுள்ள ஆளணி வாடிக்கையாளருக்கு திருப்திகரமான சேவையை செய்யக்கூடியளவு திறனும், அறிவும் கொண்டிருக்கின்றார்களா என்பதை அறிய வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு உரிய பயிற்சியினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அடுத்து நிதியை எடுத்துக் கொண்டால் அவருக்கு அனுமதிக்கப்பட்ட நிதியை கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தி சேவையை மேம்படுத்த முயற்சித்தல் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாககாரியாலயத்தில் பொருத்தமான தளபாடங்கள் இருப்பது அவசியமாகும். இதனை கருத்திற் கொண்டு ஒரு அஞ்சலதிபர் தேவையான தளபாடங்களைத் தாமதமின்றி தருவித்து பயன்பாட்டிற்கு கொடுத்தல் வேண்டும். ஏதாவதொரு காரியாலயத்தில் இவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காணப்படின் அவற்றை அவசியமான தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்தி வினைத்திறமை வாய்ந்த அஞ்சல் சேவையை வாடிக்கையாளருக்கு வழங்குவதற்கு முயற்சித்தல் வேண்டும். உதாரணமாக 3 பேர் வேலை செய்ய வேண்டிய சில அஞசலகத்தில் 2 பேர் மட்டுமிருப்பின் அவர்களை பயன்படுத்தி அதிகமான வாடிக்கையாளர் எதிர்பார்க்கும் சேவைகளுக்கு மட்டும் அவ் இருவரையும் பயன்படுத்துதல் வேண்டும். மிகக் குறைந்த வருவாய் கொடுக்கும் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும். இது போன்றே நிதியையும் பொருளையும் கையாண்டு சிறப்பான அஞ்சல் சேவையொன்றை வழங்க முடியும்.
1997 டிசெம்பர் அஞ்சல் சேவையின் காட்சித் தோற்றத்தில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் தபாற்பெட்டி, தபாற்காரர், கொடுக்கல் வாங்கல்பீட உத்தியோகத்தா,; தபாற்கந்தோர் கட்டடங்கள் என்பனவையாகும். விளக்குக?
அஞ்சல் சேவை இற்றைக்கு பல வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைவேறு அன்று தொடர்பாடல் துறையின் முழுசந்தைப் பங்கும் எமத கையில் இருந்தது. ஆனால் இன்றோ நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இன்று தபால் சேவை பல போட்டியாளர்களை சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கின்றது. நாங்கள் தபால் வர்த்தகத்தில் மிகச் சிறப்பான மேம்பாட்டை அடைவதற்கு பாடுபட வேண்டியிருக்கின்றது. டொம் பீட்டர்ஸ் (னுழஅ Pநவநசள), நன்சி ஒஸ்ரின்(யேnஉல யுரளவin) ஆகியோரின் கூற்றுப்படி பின்வரும் விடயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டி இருக்கின்றது. அ. வாடிக்கையாளர் கவனிப்பு. ஆ. தொடர்ச்சியான புது முறைகளைப் புகுத்துதல். இ. உள்ளக வாடிக்கையாளரை கவனித்தல். ஈ. சிறப்பான தலைமைத்துவம்.
இந்த வகையில் எமது தபால் சேவையில் பிரதானமான அங்கம் வகிக்கும் தபால்பெட்டி, கருமபீட உத்தி கத்தர், தபால் கந்தோர்க் கட்டடம் என்பனவை பற்றி நாம் கவனம் செலுத்துதல் வேண்டும். தெருவோரங் களில் அமைக்கப்பட்டுள்ள கடிதப் பெட்டிகள் மூலமாகவே பலர் எமது அஞ்சல் சேவையின் உயர்வை அல்லது தாழ்வை நோக்குகின்றனர். காலத்திற்குக் காலம் பழுதுபார்க்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு சிறப்பாகப் பேணும் ஒரு அஞ்சல் பெட்டியை காணும் ஒரு வாடிக்கையாளர் எமது சேவை பற்றி உயர்வாக எண்ணிக்; கொள்வார். அப்பெட்டியில் கடிதங்களை சேகரிக்கச் செல்லும் எமது உள்ளக வாடிக்கையாளராகிய அஞ்சலாளரும் தமது சேவையைப் பற்றி பெரிதாக எண்ணுவதற்கு அத ஒரு காரணியாக அமையலாம். அடுத்து தபால்காரர் தினமும் வாடிக்கையாளரை சந்திக்கும் ஒருவராக இருக்கின்றார். அனைத்து மக்களும் அஞ்சல் அலுவலகத்திற்கு வருவதில்லை ஆனால் அவர்கள் தபால்காரரை தினமும் சந்திக்கின்றனர். அத் தபால்காரர் சிறப்பாக உடையணிந்து பண்பான பேச்சுப்பேசி நேர்மையாக கடமை புரிவாராயின் அவரை அம் மக்கள் இலகுவில் மறந்துவிடமாட்டார்கள். மேலும் அவர் பற்றிய உயர்ந்த எண்ணம் முலம் அவர் சேவை செய்யும் அஞ்சல் அலுவலகத்தையும் உயர்வாக நோக்குவதோடு அது பெரிதும் உதவலாம். கரும பீட உத்தியோகத்தர்கள் தமது கருமபீடங்களுக்கு வருகின்ற வாடிக்கையாளர்களை வரவேற்று மன மகிழ்வுடன் அவர்களுக்கு சேவை புரிந்து அவர்களது எதிர்பார்ப்பை விஞ்சக் கூடியவகையில் அவர்களைத் திருப்திப்படுத்தி வழியனுப்பி வைப்பார்களேயானால் அவ்வாடிக்கையாளர்கள் அஞ்சலலுவலகத்தை இலகுவில் மறக்கமாட்டார்கள். இறுதியாக ஒரு அஞசலலுவலகத்தின் கட்டிடங்களை கவர்ச்சியாக மட்டுமன்றி வாடிக்கையாளர் இலகுவில் தமது காரியங்களை நிறைவேற்றக் கூடிய வகையில் அமைக்கப்பட்டால் அதுவும் வாடிக்கையாளரை வெகு வாக கவரக்கூடியதாக இருக்கும். மேலும் இருக்கை வசதிகள், விசாலமான இடவசதி, கடிதங்களையும் படிவங்களையும் வைத்து எழுதக்கூடிய தளபாட வசதி என்பவை கொண்ட கட்டிடங்கள் வாடிக்கையாளரின் மனதை கவரக்கூடியனவையாகும். அது மட்டுமல்லாது அலுவலக சூழல் சுத்தமாகவும் அழகாகவும் பேணப்படுவதையும் வாடிக்கையாளர் எதிர்பார்க்கின்றனர். எனவே இவை அஞ்சல் சேவையின் காட்சித் தோற்றத்தில்; செல்வாக்கு செலுத்தும் காரணிகளாக அமைந்து ள்ளன என்றால் மிகையாகாது.
1997 டிசெம்பர்
வினைத்திறமை வாய்ந்த அஞ்சல் சேவைக்கு பொறுப்பாய் உள்ள அஞ்சலதிபரானவர் கருமபீடங்களிலும் தபால் அறையிலும் நிறைவேற்றப்படும் கடமைகள் ஒழுங்காக நடைபெறுதல் குறித்து தன்னைத்தானே திருப்திப்படுத்தல் வேண்டும் ஆராய்க?
ஒரு அஞ்சல் அலுவலகத்தில் கருமபீடக்கடமைகள் திருப்திகரமாக நிறைவேற்றப்பட்டு வாடிக்கையாளரை மகிழ்ச்சியடைய (ஊருளுவுழுஆநுசு னுநுடுஐபுர்வு) செய்ய வேண்டும். இதற்கேற்ற வகையில் கருமபீடங்களில் கடமைபுரிவோர் சிறப்பாக ஆடையணிந்து புன்னகையுடன் வாடிக்கையாளரை எதிர்பார்த்து காத்திருப்பது போன்ற ஒரு தோற்ற பொலிவோடு இருத்தல் வேண்டும். வாடிக்கையாளரை வரவேற்று நட்புணர்வோடு அவர்கள் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்ற வேண்டும். விரைவாகக் கடமையாற்றி காலதாமதத்தை குறைக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் கேட்கும் தகவல்களை உடனுக்குடன் கொடுத்துதவக் கூடிய தயார் நிலையில் இருத்தல் வேண்டும். புதிய தகவல்களையும் அவர்களுக்கு எடுத்துக் கூறி எமது திணைக்கள வருவாயினைப் பெருக்குவதற்கு முயற்சித்தல் வேண்டும். இது போன்ற அணுகுமுறைகள் வாடிக்கையாளரை பெருக்குவதற்கு பெரிதும் உதவும். அதிக வாடிக்கையாளர் வரும்போது வியாபாரம் அதிகரிக்கும், வியாபாரம் அதிகரித்தால் வருமானம் கூடும்,வருமானம் கூடினால் சம்பள உயர்வுகள் கிடைக்கலாம், சம்பள உயர்வு கிடைப்பின் எமது வாழ்க்கையில் அபிவிருத்தி ஏறபடலாம். ஆனால் வாடிக்கையாளர் எம்மை நோக்கி வர வில்லையானால் இவை எதுவும் கிடைக்காமல் போகலாம். எனவே ஒரு கருமபீட உத்தியோகத்தர் வினைத் திறமையுடன் கடமைபுரியக் கூடியவகையில் தமது அறிவை (முNழுறுடுநுனுபுநு), திறனை (ளுமுஐடுடு), மனப் பாங்கை (யுவுவுஐவுருனுநு) அதாவது உதவி செய்யும் மனப்பாங்கை வளர்த்து கொள்கின்றாரா என்பதை அஞ்சலதிபர் காலத்திற்குக் காலம் அவதானிக்க வேண்டும்.
கருமபீடங்களில் பணதுஷ்பிரயோகங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு அவர் அடிக்கடி பரிசோதனை கடமைகளையும்மேற்கொள்ளுதல் அவசியமாகும்.
தபால் அறையில் கடமைகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டால் மட்டுமே எமது தபால் ஒப்படைப்பு சேவை இலாபகரமானதாகவும் மக்களை கவரக்கூடியதாகவும் அமையும். இதற்கு ஒரு அஞ்சலதிபரின் கடுமையாக கண்காணிப்பு இன்றியமையாதது. வந்து கிடைக்கும் தபால்களில் கட்டணங்கள் சரியாக செலுத்தப்பட்டுள்ளனவா,கிடைக்கும் தபால் பொருட்கள் காலதாமதமின்றி ஒப்படைக்கப்படுகின்றனவா, ஒப்படைக்கப்படாதவை உரியமுறையில் திருப்பி அனுப்பப்படுகின்றனவா, சேகரிக்கப்பட வேண்டிய கட்டணங்கள் தவறாது சேகரிக்கப்பட்டுஉடனுக்குடன் கணக்கு வைக்கப்படுகின்றனவா, கடிதப்பெட்டிகளிலிருந்து சேகரிக்கப்படும் கடிதங்கள் காலதாமதமின்றி கட்டி அனுப்பப்படுகின்றனவா, கடித சேகரிப்பு சகல கடிதப்பெட்டிகளிலிருந்தும் குறித்த நேரத்தில் செய்யப்படுகின்றனவா, ஒப்படைப்புக்கள் ஒழுங்காகவும் விரைவாகவும் செய்யப்படுகின்றனவா, என்பன போன்ற விடயங்களில் கூடிய கவனம் செலுத்தி அஞ்சலலுவலக விதிகளில் கூறப்பட்டவாறு தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு ஒரு அஞ்சலதிபர் நேரடியாகவோ அல்லது மேற்பார்வை உத்தியோகத்தர் மூலமாகவோ செயற்படுவாராயின் ஒரு வினைத்திறமை வாய்ந்த அஞ்சல் சேவை நடைபெறுகிறது என்பதையிட்டு அவர் திருப்தி கொள்ள முடியும். இவ்வாறான ஒரு இஞ்சலதிபரின் பொறுப்பில் இயங்கும் அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளரை மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய சேவை வழங்குதல் நடைபெறும் என்பதில் ஐயமில்லை.
1996 நவம்பர்
ஓர் அஞ்சல அலுவலகத்தினது தொழில் மேம்பாட்டை திட்டமிடுவதில் பொறுப்பாய் உள்ள அஞ்சலதிபர் ஒருவருக்கு மாதாந்த புள்ளி விபரங்களின் பகுப்பாய்வு எவ்வாறு முக்கியம் வாய்ந்ததாக அமைகின்றது விளக்குக?
ஒரு அஞ்சலகத்திலிருந்து பிரதி மாதமும் பல வேறுபட்ட கருமங்கள் தொடர்பான மாதாந்த திரட்டுக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. அவற்றை தயாரிப்பதன் நோக்கம் ஒரு காரியாலயத்தின் சேவைகளில் எவ்வளவு அபிவிருத்தி அல்லது எவ்வளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை ஆராய்வதேயாகும். எனவே இம் மாதாந்த திரட்டுக்கள் மூலம் கிடைக்கும் புள்ளி விபரங்களை ஒர அஞ்சலதிபர் மாதந்தோறும் நுணுக்கமாக ஆராய்ந்து அதன் அடிப்படையில் தமது காரியாலய சேவைகளின் மேம்பாட்டிற்கு நடவடிகடகை எடுக்க முடியும். இது அவரது காரியாலயத்தை உயர்ந்த தரத்தில் வைத்திருப்பதற்கு பெரிதும் உதவும்.
இநத வகையில் ஒவ்வொரு அஞ்சலதிபரும் மாதந்தோறும் ஊக்கமாக செயற்படுவாராயின் அஞ்சல் திணைக்களத்தையே ஓரு சிறந்த தாபனமாக ஆக்கிக்கொள்ள முடியும். இவ்வாறு அபிவிருத்தியடையும் பொழுதுஎமது திணைக்களம் உலகில் சிறந்த தாபனமாக (றுழுசுடுனு ஊடுயுளுளு ழுசுபுயுNஐணுயுவுஐழுN) ஆக்க முடியும்.
1998 டிசெம்பர்
கடிதம் விநியோகிக்கும் வலயங்களை மறுசீரமைத்தல் மேலதிக தபால்காரர்களை நியமிப்பதற்காகவே எப்போதும் தேவைப்படுகின்றது. இக் கூற்றைப் பற்றிய உமது கருத்துக்கதை; தருக?
ஒரு அஞ்சல் அலுவலகத்தில் கடித ஒப்படைப்பிற்கென அஞ்சலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஒரு வாரத்திற்கு400 அல்லது அதற்கு மேற்பட்ட அஞ்சல் பொருட்கள் சராசரியாக கிடைக்கப் பெற்றால் ஒரு அஞ்சலாளரை ஒப்படைப்பிற்காக நியமிக்க முடியும். மேலதிக அஞ்சலாளர் தேவைப்படின் செலவினம், வருமானம் ஆகியனவற்றின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும். அவர்களால் ஒப்படைக்கப்படும் கடிதங்களின் உச்ச எ;ண்ணிக்கையை வைத்தே இது தீர்மானிக்கப்படுகிறது. ஒரு பொதி இரண்டு கடிதங்களாகக் கணக்கிடப்படும்.
நடையில் 12 தொடக்கம் 16 மைல் பயணிக்க வேண்டுமென்றும் சைக்கிள் வண்டி மூலம் செல்லும் ஒரு அஞ்சலாளர் 17 தொடக்கம் 24 மைல் பயணிக்க வேண்டுமெனவும் 45 இறாத்தல் நிறையுடைய கடிதப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றார். ஒரு அஞ்சல் அலுவலகத்தின் ஒப்படைப்பு நடையை மீளாய்வு செய்யும் பொழுது இவை கருத்தில் எடுக்கப்படும்.
ஒரு அஞ்சலதிபரோ, உப அஞ்சலதிபரோ ஒவ்வொரு வருடமும் ஏற்படும்தபால் வர்த்தகத்தின் அதிகரிப்பை அவதானிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு பிரதேசத்திலும், ஒவ்வொரு கிராமத்திலும், நகர்ப்புறத்திலும் ஒப்படைக்கப்படும் கடிதப்பொருள் பற்றிய தனித் தனி பதிவேடுகளை பேணிவரல் வேண்டும்.சில சந்தர்ப்பங்களில் தபால் வியாபார அல்லது கடிதவிநியோக வீழ்ச்சி காணப்படும் போதும் ஒப்படைப்பு நடை (னுநடiஎநசல டீநயவ) மீளமைப்பு செய்வதற்கான கோரிக்கையை பிரதேச பிரதெச அஞ்சல் அத்தியட்சகருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.அதன் அடீப்படையில் தபால் ஒப்படைப்பு மேற்கொள்ளப்படும்.
ஒரு புதிய குடியேற்றம் உண்டாக்கப்பட்டிருப்பின் அல்லது சமூக பொருளாதார அபிவிருத்தி ஏற்பட்டிருப்பின் அதாவது ஒரு தொழிற்சாலை திறக்கப்பட்டிருப்பின் அல்லது ஒரு உப அஞ்சலகம் ஒப்படைப்பு அலுவலகமாகமாற்றப்படவேண்டியிருப்பின் மட்டுமே புதிய தபாற்காரர்கள் மேலதிகமாக நியமிக்கப்பட வாய்ப்பிருக்கும். அவ்வாறில்லாத வேளையில் ஒரு அஞசலகத்தின் ஒப்படைப்பில் ஈடுபடும் ஒரு நடை மூலம் கடிதம் ஒப்படைக்கும் அஞசலாளரை சைக்கிள் மூலம் ஒப்படைப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படும். அல்லது ஒரு அஞசலகத்தின் சகல ஒப்படைப்பு நடை பிரதேசத்தையும் ஒன்றாக்கி மீண்டும் அனைத்து அஞசலாளருக்கும் சமமான வேலை அளவை கொண்டதாக எல்வைகள் புதுப்பக்கப்பட்டு ஒப்படைப்பு நடைகள் மீளமைக்கப்படும். இச்சந்தர்ப்பங்களில் மேலதிக அஞ்சலாளர் நியமிக்கப்படுவதில்லை. எனவே இக் கூற்று சரியெனக் கொள்வதற்கில்லை என்பது எனது கருத்தாகும்.
அநேகமாக ஒப்படைப்பு நடை மறுசீரமைத்தல் செய்யப்படுவது வாடிக்கையாளருக்கு விரைவானதும் ஒழுங்கானதுமான கடித விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கேயாகும்.
1998 டிசெமபர்
மின் தொடர்பாடல் துறையில் ஏற்படும் விரைவான அபிவிருத்தி பாரம்பரிய அஞ்சல் சேவைக்கு சவாலா? வரப்பிரசாதமா? ஆராய்க?
சவீன தொடர்பாடல் கருவிகளாகிய தொலைநகல் (குயுஓ) கணினி பாவனையால் தொடர்பாடல் துறையில் தூத வளர்ச்சி ஏற்படடிருப்பது மறுக்கவோ மறைக்கவோமுடியாத உண்மையாகும். ஆனால் இவை மூலம் செய்யப்படும் தொடர்பாடலில் இரகசி;யம் பாதுகாக்கப்படுவது கேள்விக்குறியாக இருக்கின்றது. எங்களுடைய பாரம்பரிய தபாவ சேவை இன்றும் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அமைந்துள்ளது.
காலத்திற்கு காலம் புதிய தொடர்பாடல் துறைகளில் புதிய புதிய கண்டுபிடிப்புக்கள் வரும் போதெல்லாம் ஒரு அச்ச உணர்வு ஏற்படுத்தப்பட்டது ஆனால் அப்போதெல்லாம் பாரம்பரிய தபாலின் வளர்ச்சி பாதிக்கப்படவில்லைமாறாக அது மேலும் வளர்ச்சியடைந்தது. இதோ சில எடுத்துக்காட்டுகள் 1830 ம் அண்டு சாமுவேல் மோஸ் தந்தி பரிபாசையை கண்டுபிடித்தபோது தபால் சேவை பாதிப்படையும் என்று கூறப்பட்டது ஆனால் தபாலின் கொள்ளளவு 1300 மூ வளர்ச்சி கண்டது. 1876 இல் கிரகம்பெல் தொலைபேசியை கண்டுபிடித்த போது பாரம்பரிய தபாலில் வீழ்ச்சி ஏற்படுமென அஞ்சப்பட்டது. ஆனால் அதன் கொள்ளளவு 250 மூ வளர்ச்சி கண்டது. 1944 ம் ஆண்டு ஐடீஆ முதலாவது கணினியை உருவாக்கிய போதும் இவ்வாறே அஞ்சப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக தபாலின் கொள்ளளவு மேலும் 235 மூ வளர்ச்சி கண்டது. 1975 ம் ஆண்டு தொலைநகல் இயந்திரம் பாவனைக்கு வந்த போதும் தபால் வேவையில் வீழ்ச்சி ஏற்படுமென எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 200 மூ மேலதிக வளர்ச்சியினை அது கண்டது. எனவே மின்தொடர்பாடல் துறையில் ஏற்படும் அபிவிருத்தி அஞ்சல் சேவைக்கு வரப்பிரசாதமாகவே அமையும் என்பது எனது நம்பிக்கை.
1999(2000 ஜனவரி
கடிதங்களின் விநியோகம், கருமபீட சேவைகள் ஆகியனவற்றை சந்தைப்படுத்தல் எண்ணக்கருவின் ஊடாக எவ்வளவு து}ரம் மேம்படுத்தலாம்? ஆராய்க.
சந்தைப்படுத்தல் எண்ணக்கரு (ஆயசமநவiபெ ஊழnஉநிவ) என்பது பல வேறுபட்ட பிரிவுகளை கொணடிருக்கிறது. அதில் உற்பத்தி எண்ணக்கரு, உற்பத்தி பொலுள் எண்ணக்கரு, விற்பனை எண்ணக்கரு என்பன அடங்கும். இவற்றின் மூலம் பின்வரும் நோக்கங்களை அடையக்கூடியதாக இருக்கும்.
அ. உற்பத்தி செயயும் முறையில் கவனம் செலுத்துவதன் மூலம் உற்பத்தி செலவினத்தை குறைத்து வாடிக்கையாளர் வாங்கக் கூடிய வகையில் விலையை நிர்ணயித்தலும், உற்பத்தியை பெருக்கலும்.
ஆ. வாடிக்கையாளர் விரும்பும் தரச்சிறப்பான பொருட்களை உற்பத்தி செய்தல்.
இ. வாடிக்கையாளர் பொரள்களை தேவையான அளவு வாங்கக் கூடியவகையில் விற்பனனையை மேம்படுத்தல். ஈ. வாடிக்கையாளரின் தேவைகளை புரிந்து கொண்டு அவர்களை மகிழ்ச்சிப் படுத்தும் வகையில் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கு முயற்சித்தல்.
மேற்கூறப்பட்ட சந்தைப்படுத்தல் எண்ணக்கருவினு}டாக பொருள் உற்பத்தியில் மேம்பாட்டை ஏற்படுத்தவது முடியாத காரியமல்ல. ஆனால் நாமோ சேவை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள். எனவே வெ; எண்ணக்கரு நோக்கங்களை கடித விநியோகம், கரும பீட சேவைகள் ஆகியவற்றை சந்தைப்படுத்துவதற்கு பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இவை இரண்டும் வாடிக்கையாளருடன் நேரடியாகச் செய்யப்படும் சேவை நடவடிக்கையாகும்.எனவே நோக்கங்களை அடைவதற்கு முயற்சித்தல் அவசியம்.மேலே (அ) வில் கூறப்பட்டபடி உற்பத்தி செலவினத்தை குறைத்தல் என்பது சேவை உற்பத்தியில் சாத்தியமானதல்ல. ஆனால் அதனடிப்படையில் ஒரு சேவை நிறைவேற்ற காலத்தை குறைப்பதற்கு நாம் முயற்சித்தல் வேண்டும்.(ஆ) வில் கூறப்பட்ட நோக்கம் தரமான பொருள் உற்பத்தி அதனடிப்படையில் எமது சேவையின் தரத்தை மேம்படுத்த முயற்சித்தல் வேண்டும்.
(இ) இல் கூறப்பட்டவாறு எம்மிடம் வரும் வாடிக்கையாளருக்கு எமத புதிய சேவைகளைப்பற்றி எடுத்துக் கூறி அறிமகம் செய்தல் வேண்டும்.
(ஈ) இல் கூறப்பட்டவாறு வாடிக்கையாளரை கௌரவமாக வரவேற்று அவர்களின் கடமைகயை விரைவாக நிறைவேற்றி மீண்டும் அவர்கள் எம்மை நாடி வரக்கூடியதாக வழியனுப்பி வைத்தல் வேண்டும்.
இந்த வகையில் கடிதங்களை விநியோகம் செய்யும் அஞ்சலாளர்கள் அவற்றை சரியாகவும் விரைவாகவும் விநியோகித்தல் வேண்டும்.கடிதப் பொருள்களை சிதைக்கா வண்ணம் அழகாக அவற்றை அவர்களிடம் உப்படைத்தல் வேண்டும்.
தமது சேவையின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதன் முலம் மேலும் மேலும் கடிதப்பொருள்களை தபாலில் இடுவதற்கு வாடிக்கையாளரை உற்சாகப்படுத்த வேண்டும். வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து அவர்களுடன் அளவளாவி அவர்களுடைய ஐயங்களைப் போக்கி நிறைவான சேவைகளை பெற்று அவர்கள் மகிழ்ச்சியடையக்கூடியதாகக் கடிதவிநியோகம்; மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
கருமபீட சேவைகளில் வாடிக்கையாளர்களை அதிக நேரம் தாமதிக்கச் செய்யாமல் விரைவாகவும் அவர்கள் திருப்திப்படக் கூடியவகையிலும் சேவைகள் ஆற்றப்படுவதோடு எப்பொழுதும் வாடிக்கையாளருக்கு சேவை செய்யவே காத்திருப்பதாக தமது நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துதல் வேண்டும். அவர்களுக்கு செய்யும் சேவைகளில் தரச்சிறப்பை பேணவேண்டும்.அதாவது பற்றுச்சீட்டுக்களை தெளிவாக எழுதுதல், அவர்களுடைய வினாக்களுக்கு தகுந்த பதில் அளித்தல், விரைவாக கடமை புரிதல் என்பவை மூலம் அவர்களை மகிழ்ச்சிப்படுத்தலாம்.
முத்திரை, முத்திரை எழுதுகருவிகள் என்பனவற்றை வாங்க வருபவர்களுக்கு எம்மிடமுள்ள புதிய முத்திரைகளை அல்லது முத்திரை பதித்த எழுதுகருவிகளைக் காட்டி மேலும் பொருட்களை விற்பனை செய்ய முயற்சித்தல் வேண்டும். எமது புதிய சேவைகளைப் பற்றியும் (மின் அஞ்சல், இணையம், டெல்மெயில்), எடுத்துக் கூறி அவற்றை பயன்படுத்த ஊக்குவித்தல் வேண்டும். கருமபீடத்திற்கு வருபவர்களை முகமன்கூறி வரவேற்று (வணக்கம்) புன்னகையுடன் அளவளாவி அவர்கள் தேவைகளை நிறைவேற்றி வழியனுப்பி (நன்றி, மீண்டும் வருக என) வைத்தல் வேண்டும்.இந்த முறையில் சந்தைப்படுத்தல் எண்ணக்கருவின் ஊடாக கடிதங்களின் விநியோகம், கருமபீடச் சேவைகள் என்பவற்றை மேம்படுத்தலாம்.
1999 (2000 ஜனவரி)
பாரம்பரிய அஞ்சல் சேவையை திறைமையானதாக்குவதற்கு தற்கால மின் தொடர்பாடல் தொழில் நுட்பத்தை எவ்வளவு து}ரம் பயன்படுத்தலாம்?
மின் தொடர்பாடல் தொழில் நுட்பத்தில் தொலைபேசி, தொலைநகல்(குயுஓ), கணினி என்பன குறிப்பிடத்தக்கவையாக அமைந்துள்ளன. எமது நாட்டில் 1815ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வரும் பாரம்பரிய அஞ்சல் சேவையை திறம்படச் செய்வதற்கு இவற்றை பல வழிகளிலும் நாம் பயன்படுத்த முடியும்.
தொலைபேசி சேவையை பயன்படுத்தி இடங்களுக்கிடையிலான நேரடியான செய்தி போக்குவரத்தை மேம்படுத்தலாம். தொலைநகல் இயந்திரம் மூலம் பல தரப்பட்ட ஆவணங்களையும் ஓர் இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்திற்கு விரைவாக அனுப்பிவைக்கும் சேவையை பிரபலப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் சகல அஞ்சல் அலுவலகங்களுக்கும் தொலைநகல் இயந்திரங்கள் பொருத்தப்படல் வேண்டும். இணையத்தளமொன்றை உருவாக்குவதன் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு பணமனுப்பல் சேவையை உருவாக்கமுடியும். இவ்வாறு நவீன தொடர்பாடல் தொழில் நுட்பத்தை எந்த வகையில் பயன்படுத்தினாலும் எமது பாரம்பரிய தபால் மூலம் பாதுகாக்கப்படும் இரகசிய தபால் சேவைக்கு நிகராக எதுவும் அமையாது.
1999 (2000 ஜனவரி)
தந்திச் சேவையில் தற்போது நிலவும் திறமையின்மைக்கான காரணங்களை விளக்கி அதன் அதாடர்பாக தெரிவிக்கத்தக்க பொருத்தமான மாற்று யோசனைகள் பற்றி ஆராய்க?
தந்திச் சேவையில் நிலவும் திறமையின்மைக்கான காரணங்கள், அ. . சிறப்பான சாதனங்கள் பயன்படுத்தப்படாமை. ஆ பரிவர்த்தனை கடமைகள் எமது தாபனத்தோடு தொடர்பற்றவர்கள் மேற்கொள்வது. இ. தந்தி ஏற்றல் பரிவர்த்தனை செய்தல், ஒப்படைத்தல்ஆகிய கடமைகளை புரிபவர்களிடையே தொடர்பின்மை காணப்படுதல்.
இவற்றை நிறைவு செய்வதற்கு ஏற்ற வகையில் சிறப்பான ஒரு தொடர்பாடல் சேவை அஞ்சல் திணைக்களத்தில் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும். குறிப்பு :- அவ்வினாவிற்கான மேலும் விளக்கங்களை 2000ம் ஆண்டு நான்காம் வினாவிற்கான விடையில் பெற்றுக்கொள்ள முடியும்.
2000 டிசெம்பர்
"ஒவ்வொரு நாளும் காலையில் தபால்காரர்கள் கடிதங்களை விநியோகிக்க செல்லு முன்பாக அவர்கள் தொடர்பான கிட்டிய மேற்பார்வை கடிதங்களை சரியாக விநியோகிப்பதற்கு உதவும் " ஆராய்க?
ஒரு தபாலகாரர் ஓப்படைப்பிற்காக காரியாலயத்தை விட்டு வெளியேறும் போது தாம் எடுத்துச் செல்லும் கடிதப்பொருட்களை ஒரு ஒழுங்கு முறையில் அடுக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றார். இது தவறான ஒப்படைப்பை தவிர்ப்பதற்கும் அநாவசிய தாமதங்களை தடுப்பதற்கும் உதவியாக இருக்கும். இதற்காக முதலில் பிரதான பாதை, தாபனங்கள் என்ற வகையில் தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும். அடுத்து ஒவ்வொரு பாதை, தாபனம் என்ற வகையில் கடிதங்கள் தெரிவு செய்யப்பட்டு அடுக்கப்படல் வேண்டும்.இந்த வகையில் செயல்படுத்துவதற்கு ஒரு தபால்காரர் குறித்த நேரத்தில் அஞ்சலகத்திற்கு வந்து தமது ஒப்படைப்பு நடைக்கான (னுநுடுஐஏநுசுலு டீநுயுவு) கடிதத் தெரிவை மேற்கொள்ளுதல் வேண்டும்.இவ்வாறு ஒரு தபால்காரர் தமது கடமையைச் செய்கின்றாரா என்றும் காரியாலயத்தை விட்டு வெளியேறும் போது தமக்குரிய அஞ்சல் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துச் செல்கின்றாரா என்றும் மேற்பார்வை செய்வதையே அக் கூற்று குறிப்பிடுகின்றது. ஆகவே இவ்வகையான மேற்பார்வை கடிதங்களை சரியாகவும் விரைவாகவும் ஒப்படைப்பதற்கு உதவும் என்பதில் ஐயமில்லை.
2000 டிசெம்பர்
பொதிச் சேவையை மேம்படுத்துவதற்கு நீர் தெரிவிக்கும் யோசனைகள் யாவை?
உள்நாட்டு வெளிநாட்டு தபால் சேவையில் பொதிச் சேவை ஒரு பிரதான இடத்தை வகிக்கின்றது எனலாம்.ஏனெனில் இலங்கை அஞ்சல் சேவையில் உள்ள பல வேறுபட்ட பொதிச்சேவைகள் மூலம் பொதுமக்கள் ஒர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பொருட்களை அனுப்பிவைக்கின்றார்கள். இன்று இத்தேவை மேலும் அதிகரித்துள்ளது. மக்கள் விஷேசமாக எமது வாடிக்கையாளர்கள் சிறந்த ஒரு பொதிச்சேவையை எதிர்பார்க்கின்றார்கள். இதனை உணர்ந்த பல உள்நாட்டு வெளிநாட்டு தனியார் தாபனங்கள் சிறப்பான பொதிச்சேவையை வழங்குவதற்கு முன்வந்துள்ளன. எனவே நாம் இனிமேலும் எமது பொதிச்சேவையில் கவனம் செலுத்தவில்லையென்றால் சந்தைப் பங்கின் பெரும்பகுதியை (ஆயுசுமுநுவு ளுர்யுசுநு) இழந்து விடுவோம். அவ்வாறான ஒரு நிலை ஏற்படாதிருப்பதற்கு பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துதல் வேண்டும்.
அ. அளவுகளையும் நிறைகளையும் அதிகரிக்க வேண்டும். ஆ. கணினி, தொலைக்காட்சிப் பெட்டி போன்ற பெரிய சாதனங்களையும் தபால் மூலம் அனுப்பும் வசதியை வாடிக்கையாளருக்கு செய்து கொடுத்தல் வேண்டும். இ. வாடிக்கையாளரில் பலர் எமது தாபனங்களுக்கு நேரடியாக வருகைதருவதற்கு முடியாதநிலை இருப்பதை கருத்தில் கொண்டு அவர்களுடைய வீடுகளிலேயே பொருட்களை சேகரித்துப் பொதி செய்து அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்த வேண்டும். ஈ. பொதிகள் அனுப்புவதற்கான பெட்டிகளையும் மற்றும் றெஜிபோம் பொருட்களையும் அஞசலகங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் இலகுவில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக வசதி செய்தல் வேண்டும். உ. வசதிகளை பெருக்குவதில் செலவீனம் அதிகரிக்கலாம் என்று தயங்க வேண்டியதில்லை. ஏனெனில் இன்று வாடிக்கையாளர் பலர் தனியார் தாபனங்கள் மூலம் இச் சேவைகளைப் பெறுவதற்கு பெருந்தொகையான பணத்தை செலவிடுகிறார்கள். ஆனால் அச்சேவை மூலம் தமது தேவை நிறைவேற்றப்படுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றார்கள்.
2000 டிசெம்பர்
'அஞசல் சேவையை மேம்படுத்துவதற்கு மேலும் பல முகவர் நிலைய சேவைகளை அஞசல் அலுவலகப் பின்னல் வேலைக் கோலத்தினு}டாக அளித்தல் வேண்டும்." விளக்குக?
தற்பொழுது எமது திணைக்களத்தில் பல முகவர் நிலைய சேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.தேசிய சேமிப்பு வங்கி சேவைகள், மின்சாரப்பட்டியல் பணம் சேகரித்தல், அதே இடத்தில் விதிக்கும் வாகனத் தெண்ப்பண அறவீடு செய்தல், பாPட்சைக் கட்டணம் செகரித்தல், ஓய்வூதியம், ஆசிரியர் சம்பளம், பொதுசன மாதாந்த உதவிப் பணம், சயரோக உதவிப் பணம், புற்றுநோய் உதவிப் பணம், தொழுநோய் உதவிப்படி, மீனவர் ஓய்வூதியம், விவசாயிகள் ஓய்வூதியம் ஆகிய கொடுப்பனவுகள் என்பவை இம முகவர் சேவைகளைக் குறிக்கும்.இருப்பினும் இச் சேவைகள் எல்லாம் எல்லா அஞ்சல் அலுவலகங்களிலும் நு}ற்றுக்கு நு}று வீதம் நிகழ்த்தப்படுவதில்லை. இச் சேவைகளை முற்று முழுதாக பெற்றுக் கொள்வதற்கு வேண்டிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். மேலும் புதிய சேவைகளையும் அற்முகம் செய்வதற்கு முயற்சித்தல் வேண்டும்.வேறு நாடுகளில் உள்ளது போன்று விமான பயணச் சீட்டுக்கள் ஒழுங்குசெய்தல், பேருந்து, புகையிரத ஆசனங்களை ஒதுக்குதல், மின்சாரப்பட்டியல், தண்ணீர்ப் பட்டியல், தொலைபேசிப் பட்டியல், போன்ற இன்னோரன்ன சேவைகளுக்கான பட்டியல்களை தயாரித்து ஒப்படைக்கும் கைய்பிரயிட் தபால்(ர்லுடீசுஐவுநு முயுஐடு)என்னும் சேவை ஆகியவற்றை எமது திணைக்களத்தில் அறிமுகப்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுதல் வேண்டும். கணினி பாவனை அற்முகப்படுத்தப்பட்டதாலும், கணினிப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாலும்மேற்கூறப்பட்டபுதிய சேவைகளை புகுத்துவது சிரமமான காரியமல்ல. ஆனால் எமது திணைக்களத்துக்கென்று இணையத்தளமொன்று (றுநுடீ ளுஐவுநு) ஆக்கப்படுவது அவசியமாகும்.
2000 டிசெம்பர்
தற்போதைய தந்திச் சேவையை எங்ஙனம் மேம்படுத்தலாம் என்பதை விளக்குக?
தந்திச் சேவை மிகவும் பழைமை வாய்ந்த ஒரு சேவையாகும். அஞ்சல் திணைக்களமும் தொலைத்தொடர்புத் திணைக்களமும் வேறு வேறாக பிரிக்கப்படுவதற்கு முந்திய காலத்தில் அதாவது 1980 க்கு முன்னர் தந்திச் சேவை பிரபல்யம் பெற்று விளங்கியது. அக் காலையில் மோஸ் எனப்படும் ஒலி வடிவக் குறியீட்டு சொற்கள் (ஆழுசுளுநு ஊழுனுநு) பயன்படுத்தப்பட்டு தந்திகள் மிகச் சரியாகவும் விரைவாகவும் பரிவர்த்தனை செய்யப்பட்டன. அதன் பின்னர் கிhPட் எனப்படும் (ஊசுநுநுனு) ஒரு தட்டச்சுப் போன்ற இயந்திரமூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டன. பின்னர் ரெலக்ஸ் (வுநுடுநுஓ) எனப்படும் இயந்திர மூலம் மேலும் விரைவாக தந்திகள் பரிவர்த்தனை செய்யப்பட்டன. இவைகள் எல்லாம் ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்தி பரிவர்த்தனை செய்வதற்கு உதவின.இன்று கணினி வந்து விட்டது. கணினி மூலம் எந்த ஒரு மொழியையும் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) பரிவர்த்தனை செய்ய முடியும். ஆகையால் முன்னரை விட விரைவாக தந்தி சேவைகளை செயற்படுத்தக் கூடியதாக உள்ளது.எனவே தந்திச் சேவையை மேம்படுத்த வேண்டுமானால் எமது திணைக்களத்திற்கு ஒரு இணையத்தளம் அவசியம். அதுபோன்று தந்தியை ஏற்றல், பரிவர்த்தனை செய்தல், ஒப்படைப்பு செய்தல்ஆகிய மூன்று பிரதான பணிகளையும் நாமே கையாள வேண்டும்.
தந்திச் சேவையை மே;ம்படுத்துவதற்கு விரைவுதான் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. எனவே அதனை கருத்திற் கொண்டு ஒரு இணையத் தளத்திற்கூடாக குறைந்த செலவில் விரைவானதும் நிறைவானதுமான ஒரு சேவையை வாடிக்கையாளருக்கு அளிக்க முடியுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.
200 டிசெம்பர்
முத்திரைகள் சேகரிக்கும் பொழுது போக்கை பாடசாலை மாணவரிடையே பிரபல்யப்படுத்துவதில் பொறுப்பான அஞ்சலதிபரின் பொறுப்பை விளக்குக?
முத்திரை சேகரித்தல் என்பது பொழுது போக்குகளில் மிகச் சிறந்த ஒரு பொழுது போக்காகும். இதனை ராஜ பொழுது போக்கு (சுழுலுயுடு ர்ழுடீடீலு) என அழைப்பர்.
பல வேறுபட்ட நாடுகளின் முத்திரைகள் மூலம் கலாச்சார, சரித்திர, இலக்கிய, விஞ்ஞான, விவசாய, இயற்கை வள அறிவை பெருக்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும். புதிய, பாவித்த முத்திரைகளை சேகரிப்பதன் மூலம் பண வருவாயைக் கூட பெருக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் உண்டு. முத்திரைகளை வெளியிடும் பணியில் ஈடுபட்டவர்கள் என்ற வகையில் அஞ்சல் பகுதியினர் முத்திரைகளைப் பற்றி பிறருக்கு பல தகவல்களை கொடுக்கக்கூடியவர்களாக அஞ்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள் என்பதை முழு உலகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. முத்திரை சேகரிக்கும் பொழுது போக்கை கைக்கொள்வதற்கு வயதெல்லை இல்லை. எனினும் பாடசாலை மாணவர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுவதை அறியமுடிகின்றது. எனினும் பொதிய தகவல்களை பெறுவதற்கு வசதிகள் இல்லாத காரணத்தால் இப்பொழுது போக்கு அதிக வளர்ச்சியை அடையவில்லை. நாட்டின் மூலை முடுக்குகளெல்லாம் அமைந்துள்ள தபால் வலைப்பின்னல் மூலம் இப்பொழுது போக்கினை புத்துயிரூட்டி வளர்க்கக் கூடியதாக இருக்கிறதென்றால் அது மிகையாகாது. ஆகவே பொறுப்பு அஞ்சலதிபர்கள் தம் பிரதேசங்களிலுள்ள பாடசாலை அதிபர்களோடு தொடர்பு கொண்டு நேரங்களை ஒதுக்கி அப்பாடசாலைகளுக்கு சென்று முத்திரை தொடர்பான தகவல்கள் அடங்கிய உரைகளை மாணவர் மத்தியில் ஆற்றுவதன் மூலம் அவர்களின் ஆர்வத்தை து}ண்ட முடியும். மேலும் தமது பிரதேசங்களில் முத்திரை சேகரிப்போர் கழகங்களை உருவாக்க முயற்சிக்கலாம். முத்திரை பணியகத்துடன் (Pர்ஐடுயுவுநுடுஐஊ டீருசுநுயுரு) தொடர்பு கொண்டு முத்திரைகள், முதல்நாள் உறைகள் மற்றும் முத்திரை சேகரித்தலுடன் தொடர்புடைய சாதனங்கள் ஆகியவற்றை தருவித்து கொடுக்க முடியும். இவ்வாறு ஒரு பொறுப்பு அஞ்சலதிபர் முத்திரை சேகரிக்கும் பொழுது போக்கை மாணவரிடையே பிரபலயப்படுத்தலாம்.

Saturday, March 12, 2005
முத்திரைகள்
முத்திரைகளும் முத்திரை பதித்த எழுதுகருவிகளும்
முத்திரைகள் பிரதானமாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன, அவையாவன
1. அஞ்சல் முத்திரைகள்2. இறைவரி முத்திரைகள் அஞ்சல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் முத்திரைகளில் ரூ.100.00 க்கும் அதற்குக் குறைந்த பெறுமதியையும் கொண்ட முத்திரைகளை அஞ்சல் முத்திரைகளாக அஞ்சவ்க் கட்டணத்தைச் செலுத்தப் பயன்படுத்தலாம்.
அஞ்சல் முத்திரைகள் மேலும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
1. ஞாபகார்த்த முத்திரைகள்2. நிரந்தர முத்திரைகள்
ஞாபகார்த்த முத்திரைகள்
யாராவதொரு பிரபலமான ஒருவரையோ அல்லது ஒரு விழாவையோ, கட்டிடமொன்றையோ நினைவு கூர்ந்து அல்லது எதாவது ஒரு விடயத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் அச்சிட்டு வெளியிடப்படும் முத்திரைகள் ஞாபகார்த்த முத்திரைகள் ஆகும். ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒருமுறை மாத்திரமே இம் முத்திரைகள் அச்சிட்டு வெளியிடப்படும். இவை மீண்டும் மீண்டும் அச்சிடப்படுவதில்லை.
நிரந்தர முத்திரைகள்
நிரந்தர முத்திரைகள் நீண்ட கால அஞ்சல் தேவைகளுக்காக பெரும் எண்ணிக்கையில் அச்சிட்டு வெளியிடப்படுபவையாகும். இவை தேவைப்படும் தொகைக்கேற்றவாறு மீண்டும் மீண்டும் அச்சிடப்படும்.இருப்பினும் இம்முத்திரைகளும் கூட ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளின் பின் அச்சிடப்படுவதில்லை.
முத்திரையின் வரலாறு
இங்கிலாந்து நாட்டிலேயே முத்திரை முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. முத்திரை அறிமுகப்படுத்தப்பட முன்னர் கடிதங்கள் விநியோகிக்கப்படும் வேளையில் விலாசதாரரிடமிருந்தே அஞ்சற் கட்டணம் அறவிடப்பட்டது. இந் நடைமுறையினால் கட்டணம் அறவிடுவதில் பாரிய சிக்கல்கள் தோன்றியதால் சேர். றோலண்ட் ஹில் அவர்கள் அஞ்சலிடும் போதே அஞ்சல் கட்டணத்தினை முற்கூட்டி அறவிடும் முறையினைக் கொண்டுவந்தார். இதற்காக கட்டணம் குறிக்கப்பட்ட முத்திரைகள் சேர். றோலண்ட் ஹில் அவர்களினால் 1840ம் ஆண்டு மே மாதம் 06 ம் திகதி அறிமுகம் செய்யப்பட்டது. இம் முத்திரை பிரித்தானிய மகாராணியின் தலை பொறிக்கப்பட்ட, ஒரு பென்னி பெறுமதியுடைய, கறுப்பு நிற முத்திரையாதலால் இதனை "பென்னி பிளேக்" என அழைப்பர்.
இலங்கையிலே 6 பென்ஸ் பெறுமதியுடைய விக்டோரியா மகாராணியின் தலை பொறிக்கப்பட்ட முத்திரை 1857ம் ஆண்டு ஏப்ரல் 1ம் திகதி முதன் முதலில் வெளியிடப்பட்டது. ஆனால் இலங்கை நாணயத்தில் ரூபா, சதப் பெறுமதியான முத்திரை 1872க்குப் பின்னரே வெளியிடப்பட்டது.
முத்திரை வெளியீட்டில் ஒரு மைல் கல்லாக 2002 மார்ச் 15ம் திகதி; அரச வர்த்தமானி வெளியீட்டின் 200 வது ஆண்டு ஞாபகார்த்தமாக இலங்கை அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தால் எமது நாட்டிலேயே முதன் முதலில் முத்திரை அச்சிட்டு வெளியிடப்பட்டது.
முத்திரைகளை வடிவமைத்து அச்சடிக்கும் அதிகாரம் தபால் திணைக்களத்துக்கே உள்ளது. இருப்பினும் இவ்வாறு அச்சடிக்கும் முத்திரைகள் யாவும் இறைவரித் திணைக்களத்திற்கே சொந்தமானதாகும்.
முத்திரைகளைப் பேணுதல்
கருமபீட உத்தியோகத்தர்கள் தமக்குத் தேவையான முத்திரைகளை போதிய அளவில் அஞ்சலதிபரிடமிருந்து பெற்று தம்வசம் வைத்திருத்தல் வேண்டும். கருமபீடத்தில் நெருக்கடி உருவாகும் வேளைகளிலல்லாமல் ஏனைய நேரங்களில் அஞ்சலதிபரிடமிருந்து முத்திரைகளை விண்ணப்பித்துப் பெறுதல் வேண்டும். உரிய பதிவேட்டில் பெயர், திகதி, நேரம், ஏறுவரிசையில் முத்திரைகளின் பெறுமதி, எண்ணிக்கை, மொத்தத் தொகை என்பவற்றைக் குறித்து பணத்துடன் விண்ணப்பித்தல் வேண்டும். அஞ்சலதிபரிடமிருந்து முத்திரைகளைப் பெற்றதும் செவ்வைபார்த்து சரியெனில்; சரியாகப் பெறப்பட்டது என குறித்து ஒப்பமிட்டுப் பெறுதல் வேண்டும்.
இதேபோல் தேவையான சில்லறைக் காசுகளையும் தம்வசம் வைத்திருத்தல் கருமபீட உத்தியோகத்தரின் கடமையாகும். பெறப்பட்ட முத்திரைகளை முத்திரைச் செருகேட்டில் பெறுமதி ஒழுங்கில் பேணுதல் வேண்டும். மேலும் முத்திரைகளைக் கிழித்து எடுக்கும் போது சடுதியாகக் கிழி;த்தெடுக்காமல் அவற்றைத் துளையிடப்பட்ட பகுதியால் மடித்து அதன்பின்னர் அவதானமாகக் கிழித்து வேறாக்குதல் வேண்டும். தவறுதலாகக் கிழிக்கப்பட்டு சேதமுற்ற முத்திரைகள், பசையற்ற முத்திரைகள் ஆகியவற்றை எக்காரணம் கொண்டும் பொதுமக்களுக்கு விற்பனை செய்தல் கூடாது.
வழங்கப்பட்ட மொத்த முத்திரைத் தொகையில் கூடுதல் அல்லது சோர்வு காணப்படுதல் குற்றமாகும். அவ்வாறு மொத்த முத்திரைத் தொகையில் கூடுதல் அல்லது சோர்வு காணப்பட்டால் விடயத்தினை உடன் அஞ்சலதிபரின் கவனத்திற்குக் கொண்டு வருதல் வேண்டும். எனவே முத்திரைகளின் வகைகள், கையிருப்பிலுள்ள எண்ணிக்கை, கையிருப்பிலுள்ள பணம் என்பவற்றை முத்திரைக் கணக்குப் புத்தகத்தில் பதிந்து அடிக்கடி மொத்த முத்திரைத் தொகையினை சரிபார்ப்பதன் மூலம் கூடுதலையோ, சோர்வையோ தவிர்க்க முடியும்.இவ்வேளை முத்திரைக் கணக்குப் புத்தகத்தில் பெயர், திகதி என்பவற்றைக் குறிப்பதுடன் அன்றைய தின திகதி முத்திரையினையும் பதித்தல் வேண்டும். இது போன்றே முத்திரைத் தொகையினை கையளிக்கும் போதும் மேற்கூறியவாறு முத்திரைக் கணக்குப் புத்தகத்தில் பதிந்து "சரியாகக் கையளிக்கப்பட்டது" எனக் குறிப்பெழுதி கையொப்பமிட்டு, திகதி முத்திரை பதித்துக் கையளித்தல் வேண்டும்.
முத்திரைத் தொகையினை இன்னுமொருவரிடமிருந்து பாரமெடுக்கும் போது முத்திரைக் கணக்குப் புத்தகத்துடன் முத்திரைத் தொகையினையும் பணத்தினையும் ஒப்பிட்டு செவ்வைபார்த்துப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் "சரியாகப் பெறப்பட்டது" எனக் குறிப்பெழுதி கையொப்பமிட்டு, திகதி முத்திரை பதித்துப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
கிழிக்கப்பட்ட சேதமுற்ற முத்திரைகளுக்கு புதிய முத்திரைகளை மாற்றிக் கொள்ளுதல்
இவ்வாறான முத்திரைகளை பெறுமதியின் அடிப்படையில் வகைப்படுத்தி ஒவ்வொரு பெறுமதிக்கும் ஒவ்வொரு வெள்ளை அரைத்தாளினை ஒதுக்கி அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டும் கவனமாக முத்திரைகளை ஒட்டுதல் வேண்டும். பின்னர் அவற்றை அஞ்சலதிபரிடம் கையளித்து புதிய முத்திரைகளை மாற்றிக் கொள்ளமுடியும்;
அஞ்சலதிபர் இவற்றைத் தனது தழுவல் கடிதத்துடன் சேர்த்து பதிவுத் தபாலில் கணக்காளர் முத்திரைப் பகுதிக்கு அனுப்பி புதிய முத்திரைகளைப் பெற்றுக் கொள்ளலாம். தழுவல் கடிதமானது அனுப்பப்படும் முத்திரைகளின் முழுவிபரத்தையும் கொண்டிருப்பதுடன் தவறுதலாகக் கிழிக்கப்பட்ட சேதமுற்ற முத்திரைகளுக்கு புதிய முத்திரைகளை மாற்றிக் கொள்ளுதல் என்ற குறிப்பையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.
போலியான மோசடியான முத்திரைகள் அஞ்சலில் கண்டுபிடிக்கப்படல்
இரத்துச்செய்யப்பட்ட, மோசடியான , போலியான முத்திரைகள் ஒட்டப்பட்ட அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட முத்திரைகளின் பாகங்கள் சேர்த்து ஒட்டப்பட்ட அல்லது முத்திரை போன்ற படங்கள் ஒட்டப்பட்ட அஞ்சற் பொருளொன்று கருமபீடத்தில் கையளிக்கப்பட்டால் ஏற்க மறுத்தல் வேண்டும். இவ்வாறான ஒரு பொருளொன்று தபால் பெட்டியிலோ அல்லது பரிமாற்றத்தின் போதோ கண்டுபிடிக்கப்பட்டால் அதனை திகதி முத்திரையினால் ரத்துச் செய்தல் கூடாது.
இச்சந்தர்ப்பத்தில் அதனருகில் திகதி முத்திரையினைப் பதித்து அறவிடவேண்டிய தெணடப்பணத்தினையும் அஞ்சற் பொருளில் குறித்து "களவான முத்திரை" எனக் குறிக்கப்பட்ட சுட்டுத் துண்டொன்றையும் அதில் ஒட்டி விநியோகக் காரியாலய அஞ்சலதிபருக்கு விலாசமிடப்பட்ட உறையொன்றினுள் வைத்து அனுப்பிவைத்தல் வேண்டும்.வெளிநாட்டுத் தபாலாயின் உறை அத்தியட்சகர், மத்திய அஞ்சல் பரிவர்த்தனை நிலையத்திற்கு விலாசமிடப்படுதல் லேண்டும்.
இவ்வாறான உறையொன்று; காரியாலயத்தில் கிடைக்கப்பெறும் போது அஞ்சலதிபர் மேற்கூறப்பட்டவாறான அஞ்சல் பொருளொன்று கிடைக்கப்பெற்றது பற்றி விலாசதாரருக்கு அறிவித்தல் அனுப்பி காரியாலயத்துக்கு அவரை அழைப்பித்து பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவ் அஞ்சல்பொhருளினை விநியோகித்தல் வேண்டும். 1. அஞ்சல் பொருளில் குறிக்கப்பட்ட தெண்டப் பணத்தினை செலுத்துதல் வேண்டும். 2. அனுப்பியவரின் பெயர், முழுவிலாசம் என்பவற்றைத் தெரிவித்தல் வேண்டும். 3. பொருளின் உறையில் கையொப்பத்தினை இட்டு வெற்றுஉறையினைக் மீளக்கையளித்தல் வேண்டும்.
இந்நிபந்தனைகளிற்கு உடன்படாவிடில் அஞ்சல்பொருளைக் கையளித்தல் கூடாது. பொருளை அறிக்கையொன்றுடன் பெரும்பாக அத்தியட்சகருக்கு அனுப்பிவைத்தல் வேண்டும். உறையினை0 மீளப்பெற்றுக்கொண்டால் அதனை ஆரம்பக் காரியாலயத்துக்கு மேல் நடவடிக்கை;காக அனுப்பிவைத்தல் வேண்டும்.
முத்திரை பதித்த எழுதுகருவிகள்1. அஞ்சலட்டைகள்.2. உள்நாட்டு முத்திரை உறைகள்.3. வெளிநாட்டு முத்திரை உறைகள்.4. வான் கடிதங்கள்.